கர்நாடகாவில் லாரி - பேருந்து மோதல் 6 பேர் பலி; 28 பேர் படுகாயம்
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜவனகொண்டன ஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48இல் வியாழனன்று அதி காலை 2 மணியளவில் சொகுசு ஸ்லீப்பர் பேருந்து மீது கண்டெய்னர் லாரி அதி வேகத்தில் மோதியது. மகாராஷ்டிராவிலிருந்து பெங்க ளூரு அருகே உள்ள நெலமங்களா நோக்கிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரைத் தாண்டி யது. அப்போது பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கிச் சென்று கொண்டி ருந்த தனியார் சொகுசு ஸ்லீப்பர் பேருந் தின் மீது லாரி மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 5 வயது சிறுமி, லாரி ஓட்டுநர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக சித்ரதுர்கா காவல்துறை உறுதிப்படுத்தி யுள்ளது. காயமடைந்த 28 பேர் மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். பலி எண்ணிக்கையில் குழப்பம் வியாழனன்று காலை 11 மணியள வில் சித்ரதுர்கா விபத்தில் 19 முதல் 21 பேர் பலியானதாக செய்திகள் வெளி யாகின. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கர்நாடக முத லமைச்சர் சித்தராமையா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். அதே போல ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பலி யானவர்கள் மற்றும் காயமடைந்த வர்களுக்கு நிவாரணம் அறிவித்தன. ஆனால் வியாழனன்று மாலை சித்ரதுர்கா மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விபத்தில் 6 பேர் மட்டுமே உயிரிழந்தனர் என அறிவித்தார். இதனை தி இந்து ஆங்கிலம் மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் உறுதி செய்தன. இத னால் பலி எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது.
