states

img

பிரச்சனையை மூடி மறைக்க ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்து பேரம்

பிரச்சனையை மூடி மறைக்க  ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்து பேரம்

உ.பி.யில் தலித் பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம்-வன்கொடுமை

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் பெண்  கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அள வில் அதிகரித்து வருகின்றன. குறிப்  பாக உத்தரப்பிரதேசத்தில் பாலி யல் வன்கொடுமை சம்பவங்கள் இல்லாத நாட்களே என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், பாலியல் பலாத்  காரம் செய்யப்பட்ட தலித் பெண்,  விஷயத்தை வெளியில் சொல்லா மல் இருக்க ரூ.2.5 லட்சம் பேரம்  பேசிய சம்பவம் ஒன்று அம்மாநி லத்தில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஹாபூர் அருகே உயர்  சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவ ரால் 21 வயதுமிக்க தலித் பெண்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட் டார். ஆனால் இந்த விவகாரம் தொடர் பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் கிராம பஞ்சாயத்து மூலம் தீர்வு காணப்பட்டது.

நிர்வாணமாக்கி துன்புறுத்தல்

கிராம பஞ்சாயத்தில் பாலியல் பலாத்கார விவகாரத்தை வெளி யில் சொல்லாமல் இருக்க ரூ.2.5  லட்சம் பேரம் பேசப்பட்டு, பாதிக்கப்  பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தா ரிடம் பணம் கொடுக்கப்பட்டது. பணத்தை வாங்கிக்கொண்டு தலித் பெண்ணின் குடும்பம் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தலித் பெண்ணிற்கு திருமணம் நிச்ச யிக்கப்பட்டது. இதனை அறிந்து  பாலியல் பலாத்காரம் செய்த உயர்  சாதியைச் சேர்ந்த இளைஞரின் குடும்பம் தலித் பெண்ணின் வீட்டிற்  குச் சென்று பணத்தை திரும்பி தர  வேண்டும் என கொலை மிரட்டல்  விடுத்தது. மேலும் தலித் பெண் மற்  றும் அவரது தாயின் ஆடைகளை களைத்து நிர்வாணமாக்கியது. மேலும் திருமணம் செய்யவிருந்த மணமகனுக்கு பலாத்காரம் செய்  யப்பட்ட வீடியோவையும்  இளைஞ ரின் குடும்பம் அனுப்பி வைத்துள் ளது. இதனால் தலித் பெண்ணின் தந்தை ஹாபூர் மாவட்ட காவல்  காணிப்பாளர் குன்வர் சிங்கிடம்  புகார் அளித்தார். இதனையடுத்து பாலியல் பலாத்காரம் குற்றம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாலியல் குற்றவாளி மற்  றும் அவரது குடும்பத்தினர் கைது  செய்தது தொடர்பாக எந்த தகவ லும் வெளியாகவில்லை.