states

img

லண்டன் ஹைகேட் மார்க்ஸ் கல்லறையில் அசோக் தாவ்லே சொற்பொழிவு

லண்டன் ஹைகேட் மார்க்ஸ் கல்லறையில் அசோக் தாவ்லே சொற்பொழிவு

இங்கிலாந்து நாட்டின் வடக்கு லண்டனில் உள்ள ஹைகேட் கல்லறையின் கிழக்குப் பகுதியில் மாமேதை காரல் மார்க்ஸின் கல்லறை உள்ளது. இந்த கல்லறையில் மார்ச் 16ஆம் தேதி கியூபாவின் தூதர் இஸ்மாரா வர்காஸ் வால்டர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு மார்க்ஸ் நினைவு நூலகத்தின் செயலாளரும், பேராசிரியருமான மேரி டேவிஸ் தலைமை தாங்கினார். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராபர்ட் கிரிபித்ஸ், மார்க்ஸ் நினைவு நூலக தலைவர் அலெக்ஸ் கார்டன், பொருளாளர் ஹர்சேவ் பெய்ன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.