தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பணிகளிலிருந்து விலக்கல்
மார்ச் 14-ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் ஓர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வீடியோவும் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக உச்சநீதிமன்ற குழுவின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறுஉத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் உயர்நீதிமன்ற அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.