tamilnadu

மல்லிப்பட்டினத்தில் மீனவர் சங்கங்கள் நடத்திய இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி

மல்லிப்பட்டினத்தில் மீனவர் சங்கங்கள் நடத்திய  இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்கம், பாரம்பரிய விசைப்படகு மீனவர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்வில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், காங்கிரஸ் கட்சி பண்ணவயல் சு.ராஜாத்தம்பி, தமிழ்நாடு மீனவர் நலவாரியத் துணைத் தலைவர் தாஜூதீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், சேதுபாவாசத்திரம் காவல்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், இராமர் கோவில் தெரு பஞ்சாயத்தார்கள், சின்னமனை பஞ்சாயத்தார்கள், மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி  அரசு கல்லூரியில்  இயற்பியல் துறை  கருத்தரங்கம்

துக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் செயல்பட்டு வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் இயற்பியல் துறை சார்பாக, மாணவர் மன்ற பேரவை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் ம. துரை தலைமை ஏற்று துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவி பவனிகா வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் அ. டேவிட் கலைமணி ராஜ் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் முனைவர் கே. முருகானந்தன், கருத்தரங்கில் அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகைகளில் மின்னணு கூறுகளின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார்.  கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் 70 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் இயற்பியல் துறை பேராசிரியைகள் கௌசிகா , இளவரசி, அனிதா, மகாலட்சுமி, முத்துலட்சுமி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ரதி நன்றி கூறினார்.