தஞ்சாவூரில் புத்தக வெளியீட்டு விழா
திராவிட மாடல் கல்வி விளிம்பு நிலை மக்கள் குறித்து என்ன கூறு கிறது’ என்ற புத்தக வெளியீட்டு விழா தஞ்சை சரோஜ் நினைவகத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மேனாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் அண்ணா பல்கலைக் கழகத்தில் 2023 ஏப்ரல் 12-14 தேதிகளில் விளிம்புநிலை மாணவர்கள் உயர் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்கள்- ஓர் உலகப் பார்வை என்னும் தலைப்பில், சர்வதேச மாநாட்டில் ஆற்றிய ஆங்கில உரையை, தஞ்சை ச.வீரமணி, மன்னை இரா. இயேசுதாஸ் ஆகியோர் தமிழாக்கம் செய்தனர். இதில் உருவான சிறுபிரசுரத்தை பேரா சிரியர் லெ. ஜவகர்நேசன் இந்த விழா வில் வெளியிட்டார். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செய லாளர் களப்பிரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் எல்.முருகன் வரவேற்புரையாற்றினார். பேரா சிரியர் லெ. ஜவகர்நேசன் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்து உரை யாற்றினார். தொடர்ந்து பார்வையா ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மீண்டும் 60 நிமிடங்கள் விளக்கம் அளித்தார். தமுஎசக மாவட்டப் பொரு ளாளர் நன்றி கூறினார். நிகழ்வுக்கு வந்த அனைவருமே பேராசிரியர் லெ. ஜவகர்நேசன் பேசிய ஆங்கில உரையின் பிரதியையும், தமிழாக்கம் செய்த சிறுபிரசுரத்தையும் வாங்கிச் சென்றனர்.