பூபேஷ் பாகேலை குறிவைத்து மீண்டும் சோதனை
சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச் சரும், காங்கிரஸ் பொதுச் செயலா ளருமான பூபேஷ் பாகேலின் வீடு உள்பட பல இடங்களில் புதன்கிழமை அன்று சிபிஐ சோதனை நடத்தியது. ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள பூபேஷ் பாகேலின் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரு கின்றனர். ஆனால் எதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது என சிபிஐ அதிகாரிகள் விளக்கம் அளிக்க வில்லை.