புதுப்பொலிவை ஏற்படுத்திய முதலீட்டாளர் மாநாடு
தொழில் துறையில் கேரளத்தி ற்கு புதுப்பொலிவை வழங்குவதற்கான ஒரு தளமாக இன்வெஸ்ட் கேரளா உலகளா விய உச்சி மாநாடு மாறியுள்ளது. இதைப் பராமரித்து முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் கேரளத்தில் முத லீடு செய்ய தொழில் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் முதலமைச் சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.
கேரள முதலீட்டு உலகளாவிய உச்சி மாநாட்டிற்காக அரசாங்கத்துடன் ஒத்து ழைத்த தொழில் மற்றும் வர்த்தக அமை ப்புகளின் கூட்டத்தில் முதலமைச்சர் பேசி னார். அப்போது அவர் மேலும் பேசுகை யில், கேரளாவின் முதலீட்டுத் திறன் கொண்ட துறைகளை வணிக சமூகத்திற்கு வெளிப்படுத்தவும், நம்பிக்கையை ஏற் படுத்தவும் இந்த உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்த நம்பிக்கை, இன்வெஸ்ட் கேரளா மூலம் ரூ.1.52 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழிவகுத்தது. உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் முதலீடு களை நனவாக்க மேலும் நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.
இன்வெஸ்ட் கேரளாவின் சூழலில் மாநிலத்தில் தொழில் துறையின் எதிர் கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இந்த மாதம் 14 ஆம் தேதி சம்மந்தப் பட்ட அமைச்சர்களின் கூட்டத்தை முதல மைச்சர் கூட்டுவார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் தொழில் வர்த்தக சங்கங்க ளின் கூட்டம் நடைபெறும்.
அதேபோன்று இன்வெஸ்ட் கேரளா வின் போது கேரளம் பெற்ற முதலீட்டு வாக் குறுதிகள் தொடர்ந்து ரூ.1.75 லட்சம் கோ டியாக உயர்ந்துள்ளது என அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார். இது தொழில் துறை அமைப்புகள் உட்பட அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவா கும். இன்வெஸ்ட் கேரளாவிலிருந்து இதே போன்ற தொழில்துறை திட்டங் கள் ஏழு துறைகளாக வகைப்படுத்தப் பட்டு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள திட்டங்க ளின் தொடர் பணிகளை மேற்கொள்ள 12 நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். முதன் மைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், தொழில்துறை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் திட்டங்களை மதிப்பீடு செய்வார் என்று முதல்வர் கூறினார்.