states

அமித் ஷா மீண்டும் வெறுப்புப் பேச்சு

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதைப் போலவே, மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜக மூத்த தலை வரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முஸ்லிம் மக்களை குறிவைத்து வெறுப்புப் பேச் சுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். மகாராஷ்டிராவின் மல்காபூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்  அமித் ஷா பேசுகையில்,“எதிர்க் கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும். ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை முஸ்லிம் பிரிவினருக்கு அளிக்கும். இதற்கு அடிப்படை ஆதாரமாக உலமா கவுன்சில் பிரதிநிதிகளின் 10 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை மகாராஷ்டிரா காங்கிரஸ்  தலைவர் நானா படோலே ஏற்றுக்கொண்டுள்ளார். முஸ்லிம் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கவே மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு வர குறியாய் இருக்கிறது” என கூறினார். அமித் ஷாவுக்கு பதிலடி “மகா விகாஸ் அகாதி கூட்டணி பாஜகவின் இந்து -  முஸ்லிம் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒரு போதும் இயங்காது.  உலமா கவுன்சில் தொடர்பான அமித் ஷாவின் குற்றச் சாட்டு ஆதாரமற்றது. இடஒதுக்கீடு பற்றி பேச பாஜக விற்கு எந்த தகுதியும் இல்லை” என மகாராஷ்டிரா காங்கி ரஸ் தலைவர் நானா படோலே பதிலடி கொடுத்துள்ளார்.