ரப்பர் விவசாயிகள் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆதரவு
ரப்பர் நிறுவனங்களால் மேற் கொள்ளப்பட்டுவரும் சுரண்டலை ரப்பர் விவசாயிகள் உறுதியுடன் எதிர்த்துப் போராடிவருவதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வாழ்த்துக ளையும் பாராட்டுதல்களையும் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் ரப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ரப்பர் பயிரிடும் விவசாயிகளைப் பல்வேறு வடிவங்களில் சுரண்டிவருகின்றன. ரப்பர் பயன்படுத்தும் நுகர்வோரைப் பலமடங்கு விலை நிர்ணயம் செய்து சூறையாடும் ரப்பர் நிறுவனங்கள், ரப்பர் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு நியாயமான விலை கொடுப்பதற்கு மறுத்து வருகின்றன. டயர்களின் விலைகளை நிர்ணயம் செய்தல் மற்றும் பல்வேறு பிரச்சனை கள் சம்பந்தமாக இந்தியாவில் இயங்கும் ஏகபோக ரப்பர் நிறுவனங்க ளான எம்ஆர்எப், அப்போலோ, சிஇஏடி, பிர்லா டயர்ஸ் மற்றும் ஜேகே டயர்ஸ் நிறுவனங்கள் உச்சநீதி மன்றத்தில் சிவில் மேல்முறையீடுகள் செய்துள்ளன. இவற்றில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ரப்பர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கேரள விவசாயிகள் சங்கம் இணைந்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றம் ஏற்பு ; விவசாயிகளுக்கு வெற்றி
இதனை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. போராடிவரும் ரப்பர் விவசாயிகளுக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ரப்பர் நிறுவனங்களுக்கு எதிராக கேரள விவசாயிகள் சங்கம், மாநிலத்தில் இயங்கும் இதர விவசாய சங்கங்களுடன் இணைந்து நின்று, 2023 டிசம்பர் 30 அன்று தில்லியில் மாபெரும் பேரணி யை நடத்தியது. இந்தியாவில் இயங்கும் ரப்பர் நிறு வனங்களின் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடத்திட ரப்பர் விவ சாயிகளும், ரப்பர் நுகர்வோரும் ஒன்றுபட்டு போராடத் திட்டமிட்டிருக்கி றார்கள். இதற்கு அகில இந்திய விவசா யிகள் சங்கம் தன் முழு ஆதரவினை அளித்துள்ளது.