வெளிநாடுகளுக்கு புறப்பட்டார் மோடி
தில்லியில் இருந்து பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக திங்களன்று காலை புறப் பட்டுச் சென்றார். பயணத்தின் முதலில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின்பேரில் அந்நாட்டு க்குச் செல்கிறார். தொடர்ந்து டிச. 16ஆம் தேதி எத்தியோப்பியா சென்று அந்நாட்டு பிரதமர் அபியு அகமது அலி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் எத்தியோப்பியா செல்வது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் இறுதியாக டிச. 17ஆம் தேதி ஓமன் செல்லும் பிரதமர், அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தி த்து இருதரப்பு பொருளாதாரம், வர்த்த கம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு குறித்துப் பேச இருக்கிறார் என செய்திகள் வெளியாகி யுள்ளன.
காற்று மாசுபாடு, தீவிர மூடுபனி தில்லியில் இயல்பு நிலை பாதிப்பு ; விமானங்கள் ரத்து
தில்லியில் காற்று மாசுபாடு தீவிர மடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 450 ஆக உள்ளது. இதனால் தில்லி மக்கள் மூச்சு விடாமல் தவித்து வருகின்றனர். காற்று மாசால் சுவாசம், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக் கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உருவெடுத்துள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், தில்லியில் காற்று மாசோடு குளிரும் வாட்டி வருவதால் அங்கு இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காற்று மாசுபாடிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து தில்லி யின் மதிய நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. குறிப் பாக காலை நேரங்களில் மைனஸ் அள விற்கு குளிர் நிலவியது. இதனால் தில்லி யில் சாலை, ரயில், விமானப் போக்கு வரத்து சேவைகள் முடங்கின. போக்குவரத்து நெரிசல் தில்லி மார்க்கத்தில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டன. மெட்ரோ மற்றும் சாதாரண ரயில்கள் மட்டும் குறை வான வேகத்தில் இயங்கின. திங்களன்று காலை சுமார் 66 விமானங்கள் ரத்து செய் யப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக இயக்கப்பட்டன. மதிய நேரத்தில் மூடு பனி விலகியதால், விமா னப் போக்குவரத்து லேசான அளவில் இயல்புநிலையை அடைந்தது. குறிப்பாக சாலைகளில் வாகனங்களின் வேகம் குறைந்தது. இதனால் நகரம் முழுவ தும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.