ஸ்டார் லிங்க் உடனான ஒப்பந்தங்கள் நாட்டின் பாதுகாப்பை காவு கொடுக்கும்!
எலான்மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்குடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்துள் ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை அளிப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்காக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கு டன் இணைந்துள்ளதாக சமீபத்தில் வெளி யான செய்திகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு கவலைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. சட்டங்களை மீறி ஒப்பந்தம் 2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் ஒரு அரிதான வளம் என்றும், திறந்த, வெளிப் படையான ஏலம் மூலம் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அதனை ஒதுக்க முடியும் என்றும் கூறியிருந்தது. அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கான எந்த வொரு தனியார் ஒப்பந்தமும் நாட்டின் சட்டத்தை மீறும் செயலாகும். செயற்கைக் கோள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டில் ஆதிக்கம் செலுத்த ஜியோ, ஏர்டெல் மற்றும் ஸ்டார்லிங்க் ஆகியவை இணைந்து ஒரு கூட்டணியை உரு வாக்குவது இந்தியாவில் உள்ள பல லட்சக் கணக்கான தொலைத்தொடர்பு சந்தாதாரர் களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வெறும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அல்ல! மேலும் செயற்கைக்கோள் அலைக்கற்றை களை இஸ்ரோ மற்றும் ராணுவப் பயன்பாடு களுக்கு மட்டுமே ஒதுக்கிட வேண்டும். இது அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது என்ற பிரச்சனை மட்டுமல்ல, இந்திய வான்வழியில் எத்தனை சுற்றுப்பாதை இடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டு விடக்கூடிய ஒரு விஷயமும் ஆகும். அத்தகைய சுற்றுப் பாதை இடங்களைக் கைப்பற்ற ஏகாதிபத்திய நாடுகளை அனுமதிப்பது மட்டுமல்லாமல், நம் இயற்கை வளங்களை வரைபடங்கள் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தெரிந்துகொள் வதற்கு வழிதிறந்துவிடக்கூடிய விஷயமுமாகும். நம் நாட்டின் வானிலை, பயிர்களின் நிலை ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்ளக்கூடிய அதே சமயத்தில், நம் ராணுவ ரகசியங்களை அவர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வ தற்கும் இதன்மூலம் வாய்ப்பு வசதிகள் ஏற்படுவ தால், இது நம் நாட்டின் தேசிய மற்றும் பாது காப்பு நலன்களுக்கு எதிரானதாகும். குறிப்பாக இஸ்ரோ மற்றும் இதர இந்திய நிறுவனங்கள் அவ்வாறு செயல்படும் திறனைக் கொண்டுள்ளன. அமெரிக்காவிடம் எச்சரிக்கை தேவை ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் இதுபோன்ற தொலைத்தொடர்பு சேவைகள் மிக முக்கிய மானவையாகும். உக்ரைன் ராணுவத்திற்கு ஸ்டார்லிங்க் சேவைகளை நிறுத்துவதாக அமெரிக்கா மிரட்டி, அதன் இயற்கை வளங் களை அபகரிப்பது மற்றும் தனது தலைமை யின் கீழ் ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சு வார்த்தை நடத்துவது போன்றவற்றை ஜெல ன்ஸ்கியை ஏற்றுக்கொள்ள வைத்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. எனவே, ஓர் அமெரிக்க நிறுவனம் மிகவும் முக்கியமான செயற்கைக்கோள் அலை வரிசை மற்றும் சுற்றுப்பாதை இடங்களைப் பெறவும், விண்வெளி ஏகபோகத்தை உரு வாக்கவும் அனுமதிப்பது நமது தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்ளும் செயலாகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)