ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் அனுராக் தாண்டா
தில்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கின்றனர். இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, காற்றின் தரக் குறியீட்டை (AQI) தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவுருக்களை மாற்றியமைக்க பாஜக அரசுகள் முன்மொழிகின்றன. இது ஆபத்தை விளைவிக்கும்.
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
2025ஆம் ஆண்டுக்கான வரைவு வெளிநாட்டுக் குடியேற்றம் (எளிதாக்குதல் மற்றும் நலன்) மசோதாவின் பிரிவு - 12 கவலை அளிக்கிறது. இந்தப் பிரிவு குடியேற்றச் சட்டம், 1983-ஐ நீக்க முன்மொழிகிறது. குறிப்பாக மசோதாவின் பிரிவு - 12 அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புவதாக அமைகிறது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
உத்தரப்பிரதேசத்தில் எஸ்ஐஆர் மூலம் 3 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்படும் அபாயத்தில் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக தோற்ற இடங்களில் வாக்குகள் முற்றிலும் நீக்கப்படும். இது ஜனநாயகத்திற்கு எதிரான சதி. இந்த சதி எவ்வளவு தூரம் செல்கின்றது பார்ப்போம்.
திமுக எம்.பி., டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் மதத்தின் பெயரில் பொய்யான தகவல்களைப் பரப்பி தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதனை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை பிரிக்கும் இந்த மதவாத சக்திகளை என்றைக்கும் தமிழ்நாட்டில் நாங்கள் நுழைய விட மாட்டோம்.
