மணிப்பூரில் மெய்டெய் இளைஞர் கடத்திக் கொலை
இம்பால் கடந்த 3 ஆண்டுகளாக வன் முறையால் பற்றி எரிந்து வரும் மணிப்பூர் மாநி லத்தின் சுராசந்த்பூரில் மெய் டெய் சமூகத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மயங்க்லம்பம் ரிஷிகந்தா சிங் கடத்தி, சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மணிப்பூர் மாநிலச் செயலாளர் ஷேத்ரிமயும் சாண்டா வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் மாநில உதயத்தின் 54ஆவது ஆண்டு தினமான ஜன வரி 21 அன்று, சுராசந்த்பூரில் ஆயுதம் ஏந்திய குக்கி பயங்கர வாதக் குழுவால் ரிஷிகந்தா சிங் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கி றது. வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசும், மாநில அரசும் தோல்வியடைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. படுகொலை நம்பத்தகுந்த வட்டாரங்களின் படி, மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த ரிஷிகந்தா சிங், குக்கி சமூகத்தைச் சேர்ந்த அவரது மனைவி சிங்னு ஹாவ்கிப் ஆகியோர், சுராசந்த்பூர் செல்வதற்கு அந்தப் பகுதியில் செயல்படும் (ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படி) குக்கி பயங்கரவாதக் குழுவிடமும், மாவட்ட தலைமையக அதிகாரி களிடமும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் இந்தத் தம்பதியினரை கடத்தியதும், ரிஷிகந்தா சிங்கைக் கொன்றதும் தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது மணிப்பூரின் உயிர், உடைமை, நீதி, உரிமைகள், பொது பாது காப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய வற்றின் மீது நடத்தப்பட்ட கடு மையான தாக்குதலாகும். மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் உயிர் இழப்புகளைத் தவிர்க்க உட னடியாக தீர்க்கமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் உளவுத்துறை, பாதுகாப்பு அறிக்கைகளைப் பெறுவதில் தோல்வியடைந்த சட்டம்-ஒழுங்கு க்குப் பொறுப்பான அதிகாரி களைப் பதவி இறக்கம் செய்ய வேண்டும் என சிபிஎம் மணிப்பூர் மாநிலக் குழு கோருகிறது. ரிஷிகந்தா சிங்கின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு சிபிஎம் மணிப்பூர் மாநிலக் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒருமைப்பாட்டையும் தெரி வித்துக் கொள்கிறது. மேலும் நீதி, அமைதி மற்றும் சமூக நல்லி ணக்கத்திற்காக ஒன்றிணையுமாறு மணிப்பூரில் உள்ள அனைத்து சமூ கத்தினருக்கும் சிபிஎம் வேண்டு கோள் விடுக்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
