states

img

பொறியியல் தொழில்நுட்பத்தில் ஒரு உலக சாதனை - பி.தட்சிணாமூர்த்தி

பொறியியல் தொழில்நுட்பத்தில் ஒரு உலக சாதனை

அறிவியல் மற்றும் பொறியி யல் துறையில் ஒரு நாடு  அடைந்துள்ள வளர்ச்சிதான் அந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மா னிக்கிறது. 1949 புரட்சிக்குப் பிந்தைய சீனத்தின் பயணம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அது மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்தை அறிவுப்பூர்வமாக முறியடித்த ஒரு தொழில்நுட்பப் புரட்சியாகும். தொ டக்கக் காலத்தில் போர்கள் மற்றும் தடை களால் முடக்கப்பட்ட சீனம், இன்று உலக ளாவிய 74 தொழில்நுட்பங்களில் 66-இல் முதலிடம் வகிப்பது ஒரு வரலாற்று அதிசயம் எனலாம். சவால்கள் நிறைந்த  ஆரம்பக் காலம் 1950-களில் சீனம் உள்நாட்டுப் போர் மற்றும் அமெரிக்கா திணிக்க முயன்ற அரசியல் நெருக்கடிகளால் கடுமையா கப் பாதிக்கப்பட்டது.

சியாங் கே-ஷேக்கின் படைகள் அமெரிக்க ஆதரவு டன் கலகங்களில் ஈடுபட்டிருந்த அந்த நெருக்கடியான காலத்தில், சீனம் தனது தற்காப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரே நேரத்தில் கவனித்தது. 1950-களில் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட கொரிய யுத்தம் சீனத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய முயன்றது. மேலும், 1956 முதல் 1975 வரை நீடித்த வியட்நாம் விடுதலைப் போரில் கம்யூ னிஸ்ட் படையினருக்கு உதவ வேண்டிய சர்வதேசக் கடமையும் சீனாவிற்கு இருந்தது. அமெரிக்காவின் தொடர்ச்சி யான பொருளாதாரத் தடைகள் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் சீனத்தின் தொழில்நுட்பத் தேடலைத் தடுத்தன. இருப்பினும், மாவோவின் தலைமை யிலான அரசு சோர்வடையவில்லை. 1950-களின் இறுதியில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றின் உதவியுடன் மின் நிலையங்கள், இயந்தி ரத் தயாரிப்பு மற்றும் வயர்லெஸ் தொழில் நுட்பங்களில் சீனா தனது முதல் அடியை எடுத்து வைத்தது.

1960-களில் சோவியத் உடனான முரண்பாட்டிற்கு பிறகு, ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடு களின் தொழில்நுட்பங்களை சீனா நாடத் தொடங்கியது. அந்த நாடுகள் சமத்து வமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனாவைச் சுரண்ட முயன்றாலும், அந்தச் சூழலைத் தனது கற்றலுக்கான வாய்ப்பாகச் சீனா மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. 1980-களின் மாற்றமும் 2000-களின் பாய்ச்சலும் டெங் சியோ பிங்கின் காலத்தில் சீன மாணவர்கள் லட்சக்கணக்கில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பொறியியல் படிக்க உதவித்தொகை யுடன் அனுப்பப்பட்டனர். 1990-களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, ரஷ்யா சீனாவின் முக்கியத் தளவாட விநி யோகஸ்தராக மாறியது. 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனா அடைந்த வளர்ச்சி உலக நாடுகளைத் திகைக்க வைத்தது. அணுசக்தி, விண்வெளி, இயற்பியல், கணினி மற்றும் ரோ போட்டிக்ஸ் உள்ளிட்ட 60 சதவீதத் துறைக ளில் சீனா உலகத் தரத்திற்கு முன்னேறியது. 2001-இல் வெறும் 7,500 ஆக இருந்த  மின்னணு நிறுவனங்களின் எண்ணிக் கை, 2005-இல் 67,000 ஆக உயர்ந்தது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்கினை மின்னணுத் துறையே வகித்தது. 11-ஆவது ஐந்தா ண்டுத் திட்டத்தில் (2006-2010) உயர் தொழில்நுட்பத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் ஒருங்கிணைந்த மின்னணு சர்க்யூட் (Integrated circuit) தொழில் வேகமான வளர்ச்சியை எட்டியது. இத்துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை 2000 முதல் 2010 வரை நான்கு மடங்கு அதிகரித்தது.

பொறியாளர்களின் தேசம் உயர்கல்வியில் சீனா காட்டிய அதீத அக்கறை, அந்த நாட்டை “பொறியாளர்க ளின் தேசமாக” மாற்றியது. 2010-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அமெரிக்கா வில் 14 லட்சம் பொறியாளர்கள் மட்டுமே இருந்தபோது, சீனாவில் 24 லட்சம் பொறியாளர்கள் இருந்தனர். இந்த மகத்தான மனித வளமே சீனத்தை உலகின் மிகப்பெரிய மின்னணு சாதன உற்பத்தியாளராக மாற்றியது. அதிவேக ரயில்கள் மற்றும் மிக உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற சாதனங்களில் சீனா “தேசியமயமாக் கப்பட்ட மையத் தொழில்நுட்பம்” (Nationalization of core techno logy) என்ற கொள்கையை முன்னெ டுத்தது. தொழில்துறை ரோபோக்களின் விற்பனைப் பங்கு 2005-இல் 3.7% ஆக இருந்து, 2010-இல் 12.4% ஆக உயர்ந்தது. எங்குமே கட்டுப்பாடற்ற அந்நிய முதலீட்டைச் சீனா அனுமதித்த தில்லை; மாறாக, தொழில்நுட்பப் பரி மாற்றத்தை ஒரு நிபந்தனையாகக் கோரி உள்நாட்டுத் திறனை மேம்படுத்தியது. உலகை வியக்க வைத்த பொறியியல் சாதனைகள் 2015-க்குப் பிறகு “மேட் இன் சீனா 2025” கொள்கை மூலம் சீனா ஒரு உலக ளாவிய போட்டியாளராக மாறியது. அதன் சில சாதனைகள் இதோ: Hஉலகின் நீண்ட கடல் பாலம்: ஹாங்காங்– ஜுஹாய்–மக்காவ் ஆகியவற்றை இணைக்கும் 55 கி.மீ நீளமுள்ள கடல் பாலம் உலகின் மிக நீளமான கடல் கடக்கும் பாதையாகும். கடலுக்க டியில் சுரங்கப்பாதை மற்றும் செயற்கைத் தீவுகளைக் கொண்ட இது நவீனப் பொறியியலின் உச்சம்.

Hஅதிவேக ரயில் புரட்சி: 50,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான அதிவேக ரயில் வலையமைப்பைச் சீனா கொண்டுள் ளது. 2024 டிசம்பர் 29 அன்று மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய  புல்லட் ரயிலை பெய்ஜிங்கில் அறி முகப்படுத்தியது. H ஆழமான பூமி துளையிடல்: தாரிம் படுகையில் 10,910 மீட்டர் ஆழம் வரை துளையிடக்கூடிய உலகின் முதல் 12,000 மீட்டர் தானியங்கி ‘ரிக்’ கருவி யைச் சீனா உருவாக்கியுள்ளது. Hசுரங்கப்பாதை தொழில்நுட்பம் (TBM): 5,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட ‘சுரங்கப்பாதை துளையிடும் இயந்தி ரங்களை’ (TBM) தயாரிப்பதில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது.

மஞ்சள் நதிக்கு அடியில் 17.5 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப்பாதை அமைத்தது இதன் உச்சகட்ட சாதனையாகும். 16.18 கி.மீ நீளமுள்ள நீருக்கடியில் செல்லும் ஜியாங்காய் நெடுஞ்சாலைச் சுரங் கப்பாதை 250 கி.மீ வேகத்தில் பய ணிக்கும் ரயில்களுக்காக வடிவ மைக்கப்பட்டுள்ளது. H மின்சார வாகனங்கள் (EV): உலக ளாவிய மின்சார வாகன உற்பத்தியில் 70% க்கும் அதிகமான பங்களிப்புடன் சீனா இன்று செல்வாக்கு செலுத்து கிறது. 2025-இன் அறிவுசார் வல்லரசு ஆஸ்திரேலியப் பன்னோக்கு பகுப்பாய்வுக் கொள்கை நிறுவனம் (ASPI) 2025 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கை யின்படி, உலகின் முக்கியமான 74 தொழில்நுட்பங்களில் 66-இல் சீனா இப்போது முன்னணியில் உள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்த அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலா திக்கத்தை மக்கள் சீனம் முழுமையாக உடைத்தெறிந்துள்ளது. இது வெறும் தற்செயலானது அல்ல; பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மனித வளத்துடன் மிகச் சரியான திட்டங்களால் இணைத்ததன் விளைவாகும். புரட்சிகர அரசு நிர்வாகத்தின் மூலம்,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுக ளால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலா ளர் படை இச்சாதனைகளை நிகழ்த்தி யுள்ளது. சீன இயல்புகளுடன் கூடிய சோசலிசம், அறிவியலின் துணையோடு உலகை ஒரு புதிய திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. இது சோசலிசக் கட்டுமானத்தின் வெல்ல முடியாத வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.