states

தீக்கதிர் விரைவு செய்திகள்

முடி வெட்டியதற்காக தலித் மாணவனை தாக்கிய 8 ஆசிரியர்கள்

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷா ஹரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆவது படிக்கும் 17 வயது  மாணவன் அழகாக முடி வெட்டியதற்காக  அப்பள்ளியின் 8 ஆசிரியர்கள் கொடூர மாக தாக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர்களின் தாக்குதலில் தலித்  மாணவனுக்கு தலையில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளதாவும், 4 தையல் போடப்  பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அதே போன்று கையில் எலும்பு  முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜனவரி 25-ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம்  மற்றும் ஆசிரியர்கள் மிரட்டியதால் பாதிக்  கப்பட்ட தலித் மாணவரின் பெற்றோர்  கள் இதுதொடர்பாக புகார் அளிக்க வில்லை. ஆனால் பள்ளியில் தொடர்ந்து  மாணவர் துன்புறுத்தப்பட்டதால் மாண வரின் பெற்றோர்கள் காவல்நிலையத் தில் புகார் அளித்துள்ளனர். 8 ஆசிரியர் கள் மீதும் வழக்குப் பதிவு செய்த நிலை யில், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி யில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு நெஞ்சுவலி

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

நாட்டின் குடியரசுத் துணைத் தலை வர் ஜக்தீப் தன்கருக்கு (73) ஞாயிறன்று அதிகாலை 2 மணி  அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதனையெடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்து வமனையில் ஜகதீப் தன்கர் அனுமதிக் கப்பட்டுள்ளார். ஞாயிறன்று மாலை நில வரப்படி ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் இருதய வியல் துறைத் தலைவர் டாக்டர்.ராஜீவ்  நாரங்கின் மேற்பார்வையின் கீழ் தீவிர  சிகிச்சைப் பிரிவில் (CCU) சிகிச்சை பெற்று  வருவதாக செய்திகள் வெளியாகியுள் ளன. ஆனால் அவரது உடல்நிலை தொடர்  பாக உறுதியான எந்த தகவலும் வெளி யாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.