70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் தங்க ளது பதவியை திடீ ரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எம்எல் ஏக்கள் 7 பேரும் ராஜினாமா செய்துள்ள னர் என ஆம் ஆத்மி கட்சியின் மேலிட வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. ராஜினாமா செய்தவர்கள் : நரேஷ் யாதவ் – மெக்ராலி, பாவனா கவுர் – பாலம், ராஜேஷ் ரிஷி – ஜனக்புரி, மதன் லால் – கஸ்தூர்பா நகர், ரோகித் மெக் ராலியா – திரிலோக்புரி, பி.எஸ்.ஜூன் – பிஜ்வாசன், பவன் சர்மா – ஆதர்ஷ் நகர் ஆகிய 7 பேர் எம்எல்ஏ பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவது தொடர்பாக ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.