states

img

நாய் குரைத்ததால் நிலச்சரிவில் இருந்து 67 பேர் உயிர் தப்பினர்

நாய் குரைத்ததால் நிலச்சரிவில் இருந்து  67 பேர் உயிர் தப்பினர்

இமாச்சலப் பிரதேசத்தில் இரவில் நாய் ஒன்று குரைத்ததில் நிலச்சரி வில் இருந்து  67 பேர் உயிர் தப்பியுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாகக் கன மழை கொட்டி வருகிறது. இந்தக்  கனமழையின் காரணமாக பல இடங்களில் திடீர் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளன.  நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் மண்டி என்ற பகுதி யில் உள்ள சியாத்தி கிராமம் நிலச்சரிவால் தரைமட்டமானது. “இரவு மழை பெய்து கொண்டி ருந்தபோது, நாய் திடீரெனச் சத்தமாகக் குரைக்க ஆரம்பித் தது. அப்போது வீட்டின் உரிமை யாளர் எழுந்து சென்று பார்த்த போது, வீட்டின் சுவரில் பெரிய விரிசல் விழுந்திருப்பதையும், தண்ணீர் உள்ளே வருவதையும் கவனித்துள்ளார். உடனே அவர் நாயுடன் கீழே ஓடிவந்து வீட்டில் அனைவரையும்  எழுப்பியது டன் அண்டை வீட்டரையும் எழுப் பிப் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அவர்கள் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின.  இதனால் அப்பகுதியில் பெரும் உயிரிழப்பு தடுக் கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உதவி செய்து வருகின்றனர்.  ஜூன் 20 ஆம் தேதி பருவ மழை துவங்கியதில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில்   78 க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். இதில் நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு தொ டர்பான சம்பவங்களில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.