states

img

திருப்பதி கோவிலில் நெரிசல் 2 தமிழர்கள் உட்பட 6 பேர் பலி தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு  இலவச டோக்கன்  விநியோகிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந் தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர் களில் திரண்டிருந்தனர். குறிப்பாக விஷ்ணு நிவாசம், பைராகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண் டர்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எஸ்.லாவண்யா (38 - ஆந்திரா), மல்லிகா (50 - தமிழ்நாடு), புத்தேடி பாபு (55 - ஆந்திரா), சாந்தி (33 - ஆந்திரா), ஜி. ரஜினி (47 - ஆந்திரா), வி.நிர்மலா (55 - கேரளா)  ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். காயம் காரணமாக சிகிச்சைக்காக 41 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 21 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து நெரிசலில்  சிக்கி உயிரி ழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.