சத்தீஸ்கரில் பயணிகள் - சரக்கு ரயில் மோதல் 6 பேர் பலி ; 20 பேர் காயம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ் பூர்-கட்னி இடையிலான ரயில் பாதை அம்மாநிலத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை ஆகும். செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் பிலாஸ்பூர் - கட்னி ரயில் பாதையில் பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது. இரண்டு ரயில்களும் மோதிய இந்த கோர விபத்தில் 6 பேர் வரை உயிரி ழந்துள்ளனர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்ப தால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என செய்திகள் வெளி யாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரயில் பாதை சீல் வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
