உத்தரப்பிரதேசத்தில் 4 கோடி வாக்காளர்கள் நீக்கம்?
உத்தரப்பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போதே அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) மேற்கொண்டு வருகிறது. 2025 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 15 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 4 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள னர். 18 வயது நிரம்பியவர்களை புதிதாக சேர்க்கும் போது வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர, பெருமளவில் குறைவது இயல்புக்கு மாறானதாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினராம்... இந்நிலையில், 4 கோடி வாக்கா ளர்கள் நீக்கம் தொடர்பான விசயத்தை திசை திருப்பும் நோக்கத்தில் உத்த ரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதி த்யநாத்,“மாநிலத்தில் சுமார் 4 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி யுள்ளன. விடுபட்டுள்ள வாக்காளர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் பாஜக ஆதரவு வாக்காளர் ஆவர்” என மழுப்பலாகச் கூறியுள்ளார்.