states

குஜராத்தில்  விஷவாயு தாக்கி  3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

குஜராத்தில்  விஷவாயு தாக்கி  3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் சூரத் நகரில் உள்ளது ‘நியூ பாராஸ் டையிங் மில்’ என்ற ஜவுளி பதப்படுத்தும் சாய ஆலை. இந்த ஆலையில் வெள்ளியன்று இரவு சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலா ளர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக ஆழமான ரசாயனத் தொட்டிக்குள் இறக்கப்பட்டுள்ளனர். 4 பேரும் பாது காப்பு உபகரணங்கள் இன்றி தொட் டிக்குள் இறங்கியதால், விஷவாயு தாக்கி 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரு வரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்த அன்கிட் குமார் (19), சோனு குமார் பஸ்வான் (22), சந்தீப் குமார் பஸ்வான் (22) ஆகிய மூவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மர ணங்களுக்குக் காரணம் என்று உறவி னர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.