states

img

‘ஊடுருவல்காரர்கள்’ என்ற வார்த்தை இல்லை ; கேரள அரசுக்கு குவியும் பாராட்டு

கொச்சி அரசியல் ஆதாயத்திற்கா கவும், முஸ்லிம் மக்களை தொடர்புபடுத்தும் நோக் கத்திலும் இந்தியாவில் சட்டவிரோ தமாக தங்கி இருக்கும் வங்கதேச மக்களை ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர்  வெறுப்புப் பேச்சு மூலம் வன் முறையை தூண்டுவது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் தான் ஊடுருவல் காரர்கள் என்ற பிம்பத்தை உரு வாக்க பாஜக ஆளும் மாநில அரசுகள் சதித்திட்டம் தீட்டி வரு கின்றன. அதாவது பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச மக் களை கைது செய்தால் அவர்களை ஊடுருவல்காரர்கள் என செய்தி வெளியிட்டு, முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் வேலையில் தீவிர மாக இறங்கியுள்ளன. சமீபத்தில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டி ராவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த வர்களை அம்மாநில காவல்துறை யினர் கைது செய்தனர்.  வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை ஊடுருவல்காரர்கள் என்றே மகாராஷ்டிரா காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

‘ஊடுருவல்காரர்கள்’ இல்லை

இந்நிலையில், கேரளம் மாநி லம் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூர் பகுதியில் வங்கதே சத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியி ருப்பதாக அம்மாநில காவல் துறை யினருக்குத் தகவல் கிடைத்துள் ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த எர்ணாகுளம் கிராமப்புற காவவ் துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் (எஸ்டிஎப்) விசாரணை நடத்தி, உரிய ஆவ ணங்களின்றி தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 27 பேரை கைது செய்தனர். கைது செய்யப் பட்ட வங்கதேச நாட்டவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்தனர் என்று மட்டுமே கேரள காவல்துறை தகவல் தெரி வித்துள்ளது. பாஜக ஆளும் மாநில  அரசுகளைப் போல ஊடுருவல்கா ரர்கள் என்ற வார்த்தையை பயன் படுத்தவில்லை.  இதனால் ஊடுருவல்காரர்கள் என்று கூறாமல் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையி லான இடது ஜனநாயக முன்ன ணியின் கேரள மாநில அரசுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. தமிழ்நாடு அரசும்... தமிழ்நாடு அரசும் சட்டவிரோ தமாக தங்கி இருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்தால் அவர்களின் நாட்டின் பெயரை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஊடுருவல்காரர்கள் என்ற வார்த்தையை பயன் படுத்துவதில்லை என்பது குறிப்பி டத்தக்கது.