states

img

2.5 லட்சம் காலிப் பணியிடங்கள்

2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி., முனைவர் வி. சிவதாசன் அதிரடி உரை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டரின் 2ஆவது அமர்வில் 2024 ரயில்வே திருத்தச் சட்டமுன்வடிவின் மீதான  விவாதத்தில் பங்கேற்ற முனைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பி னர் வி.சிவதாசன், ரயில்வே துறையின் சீரழிந்த நிலையை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

தடம்புரண்டு கிடக்கும் ரயில்வே அமைச்சகம்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், “ஒரு குறிப்பிட்ட துறை சார்பாக சட்டம்  நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது குறித்து முழுமையான ஆய்வு மிகவும் முக்கி யம்.  ஆனால் இன்றைய நிலையில் ரயில்வே அமைச்சகமே தடம்புரண்டு கிடக்கிறது. பின் எப்படி அது நிலைமைகளைச் சமாளித்திட முடியும்?. ரயில்வேயில் 2 லட்சத்து 50 ஆயிரம் பணி யிடங்களுக்கும் மேல் காலியாக இருக் கின்றன. இது ஓர் ஆழமான பிரச்சனை. இவற்றை  நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முறையாக எடுத்திடவில்லை.

உயிரைப் பணயம் வைக்கும் ரயில் பணியாளர்கள்

லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) பணியிடங்களில் மட்டுமே 16,373 காலியாக உள்ளன. பணிச்சுமை காரணமாக தற்போது பணியில் உள்ள பைலட்டுகள் நாளொன்றுக்கு 14 முதல் 20 மணி நேரம் வரை கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதே போல ரயில்வே அமைச்சகம் பயணி களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலைப் படவே இல்லை. தரவுகளைப் பாருங்கள் - 2014  முதல் 2023 வரை 638 ரயில் விபத்துகள் நடந்திரு க்கின்றன. இதில் 781 பேர் உயிரிழந்துள்ளனர். உயரும் கட்டணம், குறையும் வசதிகள் ஒரு பக்கத்தில் அரசாங்கம் தட்கல் அல்லது பிரிமியம் தட்கல் என்ற பெயர்களில் ரயில் கட்டணங்களை உயர்த்திக்கொண்டே இருக் கிறது. மறு பக்கத்தில் பயணிகளுக்கு அளித்து வந்த வசதிகளைக் குறைத்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் பிரதமருக்குப் பெரிய  அளவில் கட்-அவுட்டுகள் வைக்கும் அதே நேரத்தில், பயணிகளுக்குக் கழிப்பிட வசதி களைக்கூட செய்து தரவில்லை. இதுதான் இந்திய ரயில்வேயின் இன்றைய நிலை ஆகும்.

வந்தே பாரத் பொய்மை

வந்தே பாரத் போன்று அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மை நிலைமை என்ன? நான் இந்த  அவையில் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு அர சாங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ரயில்களின் சராசரி வேகம் குறைக்கப்பட்டி ருக்கிறது என்று பதில் அளித்தது.

இடஒதுக்கீடு புறக்கணிப்பு

ரயில்வேயில் முறையாகப் பணி நியமனம் செய்திடாமல் தினக்கூலிக்கு ஆட்கள் எடுக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இத னால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படு கிறது. தலித்துகள், பழங்குடியினர் போன்ற சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அனுமதித்திட மாண்புமிகு அமைச்சர் அவர்களும், இந்த அரசாங்கமும் முன்வர வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்பந்தக் கூலி வேலைகளிலும் இட ஒதுக்கீடு உண்மை யில் தேவை” என வலியுறுத்தினார்.