வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது உ.பி., பாஜக அரசின் அடாவடிக்கு சிபிஎம் கடும் கண்டனம்
புதுதில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக கோரக்பூர் மடத்தின் சாமி யாரான ஆத்யநாத் உள்ளார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தின் பரேலியில் முகமது கஞ்ச் என்ற கிரா மத்தில் ஹனீப் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் வெள்ளி யன்று 15 இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி னர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியானது. இந்த வீடியோவின் அடிப்படையில், வீட்டில் அனுமதியின்றி தொழுகை நடத்தியதாகக் கூறி ஞாயிறன்று 12 பேரை பரேலி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12 பேர் மீது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களுக்கு ஜாமீன் வழங்கினார். தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைத் தேடும் பணி நடை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. எஸ்பி மழுப்பல் இதுதொடர்பாக பரேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அன்ஷிகா வர்மா, “கடந்த சில வாரங்களாக காலியாக இருந்த ஹனீப் வீட்டில் தற்காலிக மதரசாவாகப் பயன் படுத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் இந்த நட வடிக்கையில் ஈடுபட்டனர்” என அவர் மழுப்ப லாகத் தெரிவித்தார். மேலும், “அனுமதியின்றி எந்தவொரு புதிய மத நடவடிக்கையையோ அல்லது கூட்டத்தையோ நடத்துவது சட்டத்தை மீறும் செயலாகும். இத்தகைய நடவடிக்கை கள் மீண்டும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முஸ்லிம் மக்களுக்கு அன்ஷிகா வர்மா மிரட்டலும் விடுத்துள்ளார். கண்டனம் இந்நிலையில், வீட்டில் தொழுகை நடத்திய வர்களை கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் அடாவடிச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”ஒரு தனியார் வீட்டில் தொழுகை நடத்தியதற்காக மக்களை கைது மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். மதச் சுதந்திரத்தை பெரும்பான்மைவாத அழுத்தமோ அல்லது தன்னிச்சையான காவல்துறையோ தீர்மானிக்க முடியாது. சிறுபான்மையினரை குறி வைப்பதற்கும், இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளத்தை முறையாகச் சீர்குலைப்பதற்கும் பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு அதிகாரத்தை ஆயுதமாக்குவதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு கண்டிக்கத்தக்க உதார ணமாகும்” என அதில் கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
