states

img

கைக்குழந்தையுடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பெண்

கைக்குழந்தையுடன் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பெண்

ஆந்திர மாநிலம் ரங்கம்பேட்டை காவல்நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வரும் ஜெயா, சில நாட்க ளுக்கு முன்பு விடு முறை நாளில், கைக் குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்ல கோட்டா சாலை வழி யாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் மிகக் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தான் பணியில் இல்லை என்பதை பொருட்படுத்தாமல் ஜெயா கையில் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே  சுமார் 20 நிமிடங்கள் வரை போக்குவரத்தைச் சீர்செய்தார். ஜெயாவின் இந்தச் செயலால் ஆம்பு லன்ஸ்கள் சரியான நேரத்தில் மருத்துவ மனைக்குச் செல்ல முடிந்தது. இந்த நெகி ழ்ச்சியான செயல் சமூக வலைதளங்க ளில் வைரலாகி வரும் நிலையில், ஜெயா  பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.