states

img

ஸ்கேன் இந்தியா

1,600 கோடி “ஸ்வாஹா”

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் ஈர்ப்பு அலைகளை ஆய்வு செய்வதற்கான கண்கா ணிப்பகம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் அறி விக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அறி வியல் திட்டமான இதன் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்தது. 1,600 கோடி ரூபாய்க்கான இந்த ஒப்பந்தத்தை அளிக்கும் பணி இதுவரையிலும் நடைபெறவில்லை. ஆனால் விசாரித்ததில், பணி தொடங்காவிட்டாலும் திட்டமிட்டபடி, 2030க்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா வில் உள்ள இரண்டு ஆய்வகங்களோடு இணைந்து இந்தத் திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. மாறிய சூழலில், அங்கிருந்து வேறு ஏதாவது செய்திகள் கிடைத்ததா என்று அறிவியல் வட்டாரத்தில் கேள்வி எழுகிறது. 1,600 கோடி என்னவாகும் என்று தெரியவில்லை. முடிவு எடுப்பவர்கள் அமைதி காக்கிறார்கள். பெரிய திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

சட்டம் ”ஸ்வாஹா”

அபின் “விவசாயி”யைக் காப்பாற்றிட சத்தீஸ்கர் பாஜக பெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. விநாயக் தர்மகர் என்ற பாஜக நிர்வாகிக்கு துர்க் மாவட்டத்தில் 110 ஏக்கர் அளவிலான பெரிய நிலம் உள்ளது. இது முழுவதும் வேலி போடப்பட்டு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பும் உள்ளது. இந்நிலையில் தான் அங்கு 10 ஏக்கர் அளவில் அபின் பயிரிடப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்து முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அங்கு சென்றிருக்கிறார். அபின் செடிகளைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அவரைக் கைது செய்திருந்தாலும், சட்டத்தை வளைக்க பாஜக முயற்சிக்கிறது. சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை விவாதிக்கக் கோரிய அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள்.

ஆயிரம் கோடிகள் “ஸ்வாஹா”

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த பிறகும் யமுனை நதி தூய்மையற்றதாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் நதியின் நீரைப் பரிசோதனை செய்த தில்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக்குழு தனது அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இன்னும் மோசமான நிலையில்தான் நீர் இருப்பது அதில் அம்பலமாகியிருக்கிறது. இரட்டை எஞ்சின் அரசின் செயல்பாடு படுமோச மாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொதிக்கின்றனர். ஒன்றிய அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி செலவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலைமையில் எந்த வித முன்னேற்ற மும் இல்லாமல், மோசமாக மாறியுள்ளதைச் சுட்டிக் காட்டியே இந்தக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதோடு, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டுக்குழுவின் ஆய்வு மற்றும் அதன் விபரங்களையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

புள்ளிவிபரம் “ஸ்வாஹா

பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஒடிசாவில் மதவெறிக் கலவரங்கள் அதிகரித்துள் ளன. ஜூன் 2024 முதல் தற்போது வரையில் மட்டும் 54 கலவரங்கள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் முத லமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். 2019 முதல் இந்தக் கலவரங்கள் நடக்கத் தொடங்கின. அதுவரையில் மதவெறிக் கலவரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்தக் கலவரங்களை வைத்துதான் பாஜக தனது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாகத்தின் உதவியோடு கலவரங்கள் நடத்தப்படுகின்றன. சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட பட்டியலில் கூட சில கலவரங்கள் இடம் பெறவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. பாஜக ஆட்சி என்றாலே புள்ளிவிபரங்களில் தகிடுதத்தம்தானே என்று கிண்டலடிக்கிறார்கள். மேலும் ஏழு கும்பல் கொலைகளும் நடந்திருக்கின்றன.