states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘தென் மாநிலங்கள்  தண்டிக்கப்பட்டால்  போராட்டம் வெடிக்கும்’

வெற்றிகரமாக மக்கள் தொகை யை கட்டுப்படுத்தி சாதனை படைத்த தென்மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக் கும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“தொகுதி மறு சீரமைப்பு மூலம் பீகார், மத்தியப் பிரதே சம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிர தேசத்தில் தொகுதிகளை அதிகரித்து, நிரந்தர அதிகாரத்தை பெற பாஜக முயற்சி செய்கிறது. தென்மாநிலங்களின் தொகுதி குறையாது என்றே அமித் ஷா கூறுகிறார். ஆனால் எத்தனை தொகுதிகள் அதி கரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை. தற்போதுள்ள விகிதாச்சாரப்படி தொகு திகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெற்றி கரமாக மக்கள் தொகையை கட்டுப் படுத்தியதற்காக தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக் கும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெய ரில் தென் மாநிலங்களை பலவீனப் படுத்த பாஜக சதி செய்கிறது. தெற்கில் தாங்கள் காலூன்றாததால் தென் மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதி யாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்கி றது. அதனை தடுக்க வேண்டும்” என அவர் குற்றம்சாட்டினார். மோடி அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கா னாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் மீண்டும் அதிர்ச்சி 100 கிலோ கஞ்சா பறிமுதல்

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு திரிபுரா மாநிலம் போ தைப்பொருள் கூடாரமாக மாறியுள்ளது. அங்கு ஒவ்வொரு வார மும் கோடிக்கணக்கான ரூபாயில் போ தைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக  2 நாட்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தின் கோவாய் மற்றும் தாலியா மாவட்டங்களில் இருந்து  ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொ ருட்களை (மெத்தாம்பேட்டமைன் - யாபா மாத்திரை) பாதுகாப்புப் படை யினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை அன்று திரிபுரா தெற்கு மாவட்டத்தின் சோட்டாக் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, 2 வாகனங்களில் 100 கிலோ கஞ்சாவை மீட்டதாக பிஎஸ்எப் மற்றும் சுங்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டனர்.