“மோடி அரசின் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ பழுதாகி நின்றுவிட்டது”
ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நடைபெற்ற விவா தத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பேசு கையில், “நிதிய மைச்சர் கூறிய ‘சீர் திருத்த எக்ஸ்பிரஸ்’ இப்போது பழுதாகி நின்றுவிட்டது. இளைஞர்கள் இடையே வேலையின்மை அதிகரிப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. ஒன்றிய அரசு தொடங்கிய வேலைப் பயிற்சித் திட் டங்கள் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன. அதாவது வேலையின்மை தொ டர்ந்து 15% ஆக உள்ளது. வேலையில் உள்ளவர்களில் 25 சதவீதத்துக்கும் குறை வானவர்களே முறையாகப் பணியில் இருப்பவர்களாக உள்ளனர். 144 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 2 கோடிக்கும் குறைவானவர்களே தொழிற் சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள் ளனர். பிரதமர் திட்டத்தில் விலகல் ஏன்? பெரிய ஆலைகளுடன் செயல்படும் உற்பத்தித் துறை 16 சதவீத வேலை வாய்ப்பு மட்டுமே வழங்கும் நிலையில் தொடர்ந்து சிக்கியுள்ளது. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் (Internship Scheme) வழங்கப்பட்ட 1,65,000 இடங்க ளில் 33,000 பேர் மட்டுமே ஏற்றுக்கொள் ளப்பட்டனர். அதில் 6,000 பேர் விலகி விட்டனர். இது ஏன்? பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.6,985 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.53,067 கோடி நிதி குறைக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு எந்த வளர்ச்சியும் தேவையில்லையா? பொதுத்துறை, தனியார் துறை அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாரும் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை. இந்தச் சூழலில் அரசும் மூலதனச் செலவினங்களைக் குறைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.1,44,376 கோடி யை மூலதனச் செலவினத்தில் குறைத் துள்ளனர். இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், மாநிலங்களுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடு ரூ.1,19,041 கோடி பாதியாகக் குறைக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துவிட்டது. இந்த “ஒருதலைப் பட்சமான” வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடு கவலை கொள்கிறது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமே இல்லை” என்று கடுமையாகச் சாடினார்.ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நடைபெற்ற விவா தத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பேசு கையில், “நிதிய மைச்சர் கூறிய ‘சீர் திருத்த எக்ஸ்பிரஸ்’ இப்போது பழுதாகி நின்றுவிட்டது. இளைஞர்கள் இடையே வேலையின்மை அதிகரிப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. ஒன்றிய அரசு தொடங்கிய வேலைப் பயிற்சித் திட் டங்கள் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன. அதாவது வேலையின்மை தொ டர்ந்து 15% ஆக உள்ளது. வேலையில் உள்ளவர்களில் 25 சதவீதத்துக்கும் குறை வானவர்களே முறையாகப் பணியில் இருப்பவர்களாக உள்ளனர். 144 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 2 கோடிக்கும் குறைவானவர்களே தொழிற் சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள் ளனர். பிரதமர் திட்டத்தில் விலகல் ஏன்? பெரிய ஆலைகளுடன் செயல்படும் உற்பத்தித் துறை 16 சதவீத வேலை வாய்ப்பு மட்டுமே வழங்கும் நிலையில் தொடர்ந்து சிக்கியுள்ளது. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் (Internship Scheme) வழங்கப்பட்ட 1,65,000 இடங்க ளில் 33,000 பேர் மட்டுமே ஏற்றுக்கொள் ளப்பட்டனர். அதில் 6,000 பேர் விலகி விட்டனர். இது ஏன்? பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.6,985 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.53,067 கோடி நிதி குறைக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு எந்த வளர்ச்சியும் தேவையில்லையா? பொதுத்துறை, தனியார் துறை அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாரும் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை. இந்தச் சூழலில் அரசும் மூலதனச் செலவினங்களைக் குறைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.1,44,376 கோடி யை மூலதனச் செலவினத்தில் குறைத் துள்ளனர். இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், மாநிலங்களுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடு ரூ.1,19,041 கோடி பாதியாகக் குறைக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துவிட்டது. இந்த “ஒருதலைப் பட்சமான” வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடு கவலை கொள்கிறது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமே இல்லை” என்று கடுமையாகச் சாடினார்.
