states

img

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் “இந்தியா” கூட்டணி அரசு தீர்மானம் நிறைவேற்றம்

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில்  “இந்தியா” கூட்டணி அரசு தீர்மானம் நிறைவேற்றம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் “இந்தியா” கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா உள்ளார்.  இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் திங்களன்று காலை தொடங்கியது. விவாதத்தின் போது முதல மைச்சர் உமர் அப்துல்லா, “பஹல்காம் தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. நாடு முழு வதையும் கோபத்தில் ஆழ்த்தி விட்டது. 21ஆண்டுகளுக்கு பிறகு கொடூரமாக மிக மோசமான அளவில் பயங்கரவாதிகள் தாக்கு தல் நடத்தி உள்ளனர்.  இந்த தருணத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை கோர மாட்டேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு,  எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனது அரசியல் அவ்வளவு மோசமானதா? கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து கோரியுள்ளோம். எதிர்காலத்தி லும் கோருவோம். ஆனால், 26 பேர் கொல்லப்பட்டு விட்டனர். அத னால் எங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுங்கள் என்று ஒன்றிய அரசிடம் கேட்பது எனக்கு அவமானம்.  கொல்லப்பட்டவர்களின் குடும் பத்தினரிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. விருந்தினரான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பா கத் திரும்புவதை உறுதி செய்வது எனது கடமை. என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. மன்னிப்புக் கேட்க வார்த்தைகள் இல்லை. தந்தையை இழந்த குழந்தையிட மும், திருமணமான சில நாள் களில் கணவனை இழந்த மனைவி யிடமும் என்னால் என்ன சொல்ல முடியும்? விடுமுறையை கழிக்க வந்தோம் ; எங்கள் தவறு என்ன என்று கேட்கிறார்கள்? நாங்கள்  இதுபோன்ற தாக்குதலை ஆதரிக்க வில்லை; அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் 26 ஆண்டுகளில் முதல்முறையாக ஜம்மு- காஷ்மீர் மக்கள் ஒன்றுகூடி தாக்குதலைக் கண்டித்துள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்” என அவர் உரையாற்றினார்.  தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் அரசு கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் பேரவையில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டு, சட்ட மன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.