states

img

அதிமுக கொடியைப் பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமையுள்ளது.... அமமுக தினகரன் கூறுகிறார்....

பெங்களூரூ:
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாகொரோனா சிகிச்சை முடிவடைந்த நிலையில் பெங்களுரு அரசு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சசிகலா பெங்களூரூவிமான நிலைய சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். 

தற்போது சசிகலா நலமாக உள்ளார். இருப்பினும் அவர் ஒருவார காலம் வீட்டுத் தனிமையில் இருக்கவேண்டும் என்று  விக்டோரிய மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் கே.ரமேஷ் கிருஷ்ணா அறிவுறுத்தியுள்ளார்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சசிகலாவை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இதில் சசிகலா சென்ற காரின்முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டி ருந்தது.சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். சசிகலா பொதுச் செயலாளராக உள்ள அமமுக கட்சியை  டிடிவி தினகரன் நடத்திவரும் நிலையில், சசிகலாவின் காரில் அதிமுக கொடி இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கொடியை” பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமையில்லை என்று கூறினார்.அவருக்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரூவில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவிற்கு உரிமை இருக்கிறது என்பதாலேயே அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சசிகலாவிற்கு ஒரு வாரம் ஓய்வு தேவை. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்