பெங்களூரூ:
கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் மூன்றாவது அலை அக்டோபரில் இந்தியாவைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது மிகச் சிறப்பாகக்கட்டுப்படுத்தப்படும். ஆனால் தொற்றுநோய் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றுமருத்துவ நிபுணர்களின் ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நாற்பது சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வைராலஜிஸ்டு கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பேராசிரியர்கள் ஆகியோரின் கணிப்பில், தடுப்பூசிகள் புதிய அலைப்பரவலை கட்டுப்படுத்தும்எனக் கூறியுள்ளனர். கொரோனா பரவல் குறித்து நடைபெற்ற கருத்தாய்வில் 85 சதவீதம் பேர் அல்லது 24 பேரில் 21 பேர், அடுத்த அலை அக்டோபருக்குள் வரும் என்று கூறியுள்ளனர். 70சதவீதத்திற்கும் மேற்பட்ட வல்லுநர்கள், அல்லது 34 இல் 24 பேர், மூன்றாவது அலை சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.மூன்றாவது அலை குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத் தின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்படும். தொற்றுப் பரவல் மிகவும்குறைவாகவே இருக்கும். ஏனெனில் அதிகமானோர் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டி ருப்பர். இரண்டாவது அலையில் ஓரளவு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் பெற்றிருப்பார்கள்” என்றார். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்தவர்கள் 95 கோடிப் பேர் .இவர்களில் ஐந்து சதவீதம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.