ஆந்திர பிரதேசம் கிருஷ்ணா பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசி பட்டணத்தில் இருந்து மும்பைக்கு கடத்த இருந்த 120 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், இரண்டு கார்கள், ஐந்து கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.