பீகாரில் ஆட்சியை கைப்பற்றியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம் உள்துறை அமைச்சர், சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம்
பாட்னா பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், நவம்பர் 20ஆம் தேதி பாட்னாவில் அவர் முதல மைச்சராக பதவி ஏற்க உள்ளார் எனக் கூறப் படுகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் துணைமுதலமைச்சர்களும், அமைச்ச ராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அமைச்சரவை இலாகா தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில் கடும் இழுபறி நீடித்து வரு வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலத்தில் முக்கிய பொறுப்பாக கருதப் படும் உள்துறை அமைச்சர் (சட்டம் - ஒழுங்கு) இலாகாவை பாஜக பெற துடிக்கிறது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதே போல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை. இரண்டு கட்சிகளும் உள்துறை அமைச்சர், சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுப்பதாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை யிலும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 16:14 அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றா லும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை மீண்டும் கொடுத்துள்ளோம். அதனால் 16 நபர்க ளுக்கு (பாஜகவின் முன்மொழிவு - ஐக்கிய ஜனதா தளம் 14 நபர்களுக்கு மட்டும் அமைச்ச ரவையில் இடம்) அமைச்சர் பதவி வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் 14 நபர்களுக்கு அமைச்சர் பொறுப்பு அளிப்பதை நாங்கள் விரும்ப வில்லை; எங்களுக்கும் முதலமைச்சர் பதவி யை பெறும் கட்சிஎன்ற கவுரவம் இருப்பதால், எங்கள் கட்சி உறுப்பினர்கள் தான் அதிகள வில் அமைச்சர் பதவியை ஏற்பார்கள் என ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் அமைச்சரவையில் மொத்தம் 36 அமைச்சர்கள் பதவி உள்ளது. இதில் 6 கூட்டணிக் கட்சிகளுக்கு (லோக் ஜனசக்தி, இந்துஸ்தான் அவாம்) ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 30 அமைச்சர் பதவிகளுக்கு பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை இல்லை
ஒரு மாநில சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர், சபாநாயகர் பொறுப்பு மிக முக்கியமானவை ஆகும். தற்போது பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்ற பாஜக (89) - ஐக்கிய ஜனதாதளம் (85) கட்சி களும் தனிப்பெரும்பான்மை (122 இடங் கள்) பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவு டன்தான் அங்கு செயல்பட வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும் பான்மையை தக்கவைக்க உள்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகிய 2 பதவி களை தான் சரி கட்ட முடியும். அதனால் இந்த பதவிகளை தக்கவைக்க பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதன்மூலம் ஒரே கூட்ட ணியில் இருந்தாலும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களுக்குள் நம்பிக் கை இல்லாமல் உள்துறை அமைச்சர், சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து வருகின்றன என்பது மட்டும் தெளி வாக தெரிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
