லக்னோ:
உ.பி மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய 2,940 மரங்களைவெட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால். உ.பி. அரசின் இந்தமுடிவுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வெட்டப்படும் 2 ஆயிரத்து 940 மரங்களுக்கு இழப்பீடாக 138 கோடியே 41 லட்சம் ரூபாய் செலுத்துவதாக உ.பி அரசு தெரிவித்திருந்தது. மேலும், வெட்டப்படும்மரங்களை விட அதிக மரங்கள்நடப்படும் எனவும் அரசுத் தரப் பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உ.பி. அரசின் இந்தவாதத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேதலைமையிலான அமர்வு ஏற்க மறுத்துள்ளது. புதிய மரக்கன்றை நடுவதும் 100 ஆண்டு பழைய மரத்தை வெட்டுவதும் ஒன்றல்ல! என்றுகூறியுள்ள நீதிபதிகள், உயிருடன் இருக்கும் மரங்கள் ஆக்சிஜன் தருகின்றன என்றும், மரங்களின் மதிப்பை மீதமுள்ள அவற்றின் வாழ்நாளையும் வைத்து தான் மதிப்பிட வேண்டும் என் றும் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்தை வேகப் படுத்துவதற்காகவே மரங் களை வெட்டுகிறோம் என ஒருவாதத்தை உ.பி. அரசு வைத்திருந்த நிலையில், வாகனங்களின் வேகம் குறைவாக இருந்தால்விபத்துகள் குறைவாக இருக் கும்; அந்த வகையில், வேகக் குறைவும் ஒருவகையில் நல்லதுதான் என்று கூறியுள்ளனர்.எனினும், மரங்களின் மதிப்பை மீண்டும் மதிப்பிடுவதற்கு உ.பி. அரசுக்கு 4 வாரகால அவகாசமும் நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.