ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் அவருக்கு கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 115 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் அவருக்கு கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பதவியேற்றனர்.