“மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலின் முழு செயல் முறையும் குழப்பத்தில் மூழ்கி யுள்ளது. வேட்புமனுத் தாக்கல் முதல் வாக்குப்பதிவு நாள் வரை போலீஸ், திரிணாமுல் குண்டர் களைப் பயன்படுத்தி வன்முறைகள் அதிகம் நடந்துள்ளன. அதி காரத்தின் மூலம் பெறுகின்ற இந்தப் போக்கு அடிப்படை யதார்த்தத்தை ஒருபோதும் பிரதி பலிக்காது” என மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தலின் போது நடந்த வன்முறைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.