states

img

ராணுவ மருத்துவமனைக்குள் நுழைந்த யானைகள்

மேற்கு வங்கத்தில் ராணுவ மருத்துவ மனைக்குள் யானைகள் நுழைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்த மருத்துவமனைக்கு சில யானைகள் சென்றன. முதலில் யானை ஒன்று குனிந்தபடி வார்டு ஒன்றுக்குள் நுழைகிறது. பின்னால் வரும் மற்ற இரண்டு யானைகளும் வார்டுக்குள் போகின்றன. இதை சற்று தொலைவில் உள்ள வார்டில் இருந்தவர்கள் படம் பிடித்து உள்ளனர். 
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது