states

img

புல்லி பாய் விவகாரத்தில் கைதான இளம் பெண்ணை மன்னியுங்கள்!

மும்பை, ஜன.7- இஸ்லாமியப் பெண்களின் புகைப் படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த ‘புல்லி பாய் செயலி’ விவ காரத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வேதா சிங் என்ற 18 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளி என கூறப்படுகிறது. அவரை மும்பை போலீசார் காவலில் எடுத்து விசா ரித்து வருகின்றனர்.  இந்நிலையில், பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற கவிஞர் ஜாவேத் அக்தர், “இளம் பெண் ஸ்வேதா சிங்கிற்கு கருணை காட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.  “புல்லி பாய் விவகாரத்தின் பின்னணி யில் உண்மையில் அந்த 18 வயது பெண் மூளையாக இருந்து செயல்பட்டிருந்தால் அவரை, பெண்களோ அல்லது பெரிய வர்களோ சந்தித்து, ‘அவரின் தவறு என்ன?’ என்பதை புரிய வைக்க வேண்டும். ஏனெனில், புற்று நோயால் தாயையும், கொரோனா தொற்றால் தந்தையையும் இழந்தவர் அந்த இளம்பெண். அவரை மன்னித்து, கருணை காட்ட வேண்டும்” என கவிஞர் ஜாவேத் அக்தர் கூறியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையதாக இது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.