states

img

அஜித் பவார் உள்பட 9 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்

மும்பை, ஜூலை 3- ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா கூட்டணி அர சில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார்  உள்பட 9 பேரை தகுதி நீக்  கம் செய்ய வேண்டும் என  மகாராஷ்டிரா மாநில சட் டப்பேரவைத் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு ஏக்நாத்  ஷிண்டேவை வைத்து, சிவசேனா கட்சியை உடைத்த பாஜக, இந்தாண்டு அஜித் பவாரை  வைத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துள்ளது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள் ளும் முயற்சியாக, தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள்  30 பேரை அழைத்துக் கொண்டு, ஞாயிறன்று பாஜக மற்றும் சிவசேனா (ஷிண்டே) தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணைந்தார். தனக்கு துணை முதல்வர் பதவி யைப் பெற்றதுடன், தனது ஆதரவு எம்எல்ஏக்க ளான சஜன் புஜ்பால், திலீப் வால்சே பாட்டில்,  அதிதி தாட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பாடீல் ஆகிய  8 பேருக்கும் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தார்.

இதுதொடர்பாக நாடு முழுவதும் கடும் விமர்  சனங்கள் எழுந்த நிலையில், “எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். எங்களின் பெரும் பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடை கிறோம்” என்று கூறியிருந்தார்.  அத்துடன், “கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்கள் பக்கமே இருப்பதால், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி” என்றும், “வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கி ரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடு வோம்” என்றும் அறிவித்தார். இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேர வைத் தலைவருக்கும், மாநில தேர்தல் ஆணை யத்திற்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, மின்னஞ்சல் மூலம்  கடிதம் எழுதியுள்ளது. அதில், கட்சியின் கட்டுப்  பாட்டை மீறி செயல்பட்ட அஜித் பவார் உட்பட 9  பேரையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என  வலியுறுத்தியுள்ளது. “அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைவரான சரத்  பவாருடன் உறுதியாக நிற்கிறார்கள்; 9  எம்எல்ஏக்கள் மட்டும் கட்சியாக இருக்க முடி யாது. அவர்கள் எடுத்த பதவிப்பிரமாணம் கட்சி யின் கொள்கைக்கு எதிரானது. அவர்கள் கட்சித் தலைவரின் (சரத் பவாரின்) அனுமதியின்றி உறுதிமொழி எடுத்துள்ளனர். 9 எம்எல்ஏ-க்களும் கட்சி ரீதியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள னர்” என்று கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதத்தை கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த அனில் தேஷ்முக் எழுதியுள்ளார். 

பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் 

அனில் தேஷ்முக் எழுதியிருக்கும் கடிதம்  குறித்து, மகாராஷ்டிர மாநில சபாநாயகர் ராகுல்  நர்வேகர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘’9  தேசியவாத எம்எல்ஏ-க்களை பதவி நீக்கம்  செய்ய வேண்டும் என்ற ஜெயந்த் பாட்டீல்  அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டேன். அதைக் கவனமாக படிப்பேன். அவர் குறிப் பிட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து, அதற்கு ரிய நடவடிக்கையை எடுப்பேன்’’ என்று தெரி வித்துள்ளார். மேலும், “அஜித் பவாருக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்” என்ற கேள்விக்கு, ‘’அதுபற்றி தகவல் என்னிடம் இல்லை” என்று கூறியிருக்கும் நர்வேகர், “புதிய  எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது சபா நாயகரின் தனியுரிமை” என்று கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை  புதிய எதிர்க்கட்சி தலைவராக அறிவித்துள் ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சரத் பவார்

“இன்று எழுதப்பட்ட அத்தியாயம் பல ருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு புதிதில்லை. மகாராஷ்டிரா மக்களும் இளைஞர்களும் என் மீது நம்பிக்கை வைத் துள்ளனர். நாங்கள் எங்கள் தொண்டர்களைப் போராட்டக் களத்துக்கு செல்லுங்கள் எனச் சொல்ல மாட்டோம். மாறாக, மக்களைச் சந்தியுங்கள் எனச் சொல்வோம். தேசியவாத காங்கிரஸ், ஒருபோதும் பாஜக கொள்கையை அனுமதிக்காது. கட்சியின் கொள்கையை மீறி, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இதற்காக அவர்கள் கவலைப்பட வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.

இனிமேல்தான் எங்களின் நம்பகத்தன்மை உயரும்:  சுப்ரியா சுலே

“எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்பு வோம். தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகு தான் எங்களின் நம்பகத்தன்மை அதிகரிக் கும். அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக் கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடி யாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன்” என்று தேசியவாத காங்கிரஸ்  செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித் துள்ளார்.

மகாராஷ்டிராவில் மூன்று என்ஜின் ஆட்சி: ஷிண்டே பேச்சு

“மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்து வரும் நிலையில் அஜித் பவார் வருகை யால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது என்ஜின் கிடைத்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் இணைந்த அஜித் பவார்  மற்றும் பிற தலைவர்களையும் வரவேற்கி றேன். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலை வர்களின் அனுபவம் மாநிலத்தை மேலும் வலிமையாக்க உதவும். கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நான்கு, ஐந்து இடங்களைக் கைப்பற்றின. இந்த முறை அதற்கும் வாய்ப்பு இல்லை” என்று மகா ராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொக்க ரித்துள்ளார்.

சரத் பவாருக்கு  தலைவர்கள் ஆதரவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பாஜக பிளவுபடுத்தியுள்ள நிலையில், அக் கட்சியின் தேசியத் தலைவர் சரத் பவாருக்கு தலைவர்கள் பலரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அஜித் பவாருக்கு கடும் எதிர்ப்பு

பாஜக கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரான அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (என்சிபி) கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்சிபி தலை மையகத்தில் இருந்த அஜித் பவாரின் போஸ்டர்கள் புகைப்படங்கள் அகற்றப் பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் இருக்கும் அஜித் பவாரின் புகைப்படங்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு சாயம் பூசப்பட்டு, தீயிட்டும் கொளுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் 2 என்ஜின்கள் செயலிழக்கும்: சஞ்சய் ராவத்

“ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி யை இழப்பதற்கான தொடக்கமே தற்போதைய (அஜித் பவார் துணைமுதல்வர் ஆக்கப்பட்ட) நிகழ்வு ஆகும். மகா ராஷ்டிரத்துக்கு விரைவில் புதிய முதல்வர் கிடைக்கப் போகிறார். உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி ஏக்நாத் ஷிண்டே-வும் அவரது ஆத ரவு 16 எம்எல்ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். அப்படியான நிலையில் அஜித்  பவார் புதிய முதல்வர் ஆக்கப்படுவார். இது  மூன்று என்ஜின் கொண்ட அரசாக நீடிக் காது. விரைவில் இரண்டு என்ஜின்கள் செய லிழக்கும்” என்று சிவசேனா (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி யாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர அவாத்தை நியமித்த என்சிபி

மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார், பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில்  இணைந்துவிட்ட நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர அவா த்தை, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) நிய மித்து உள்ளது. இதுதொடர்பான அறி விப்பை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஜெயந்த் பாட்டீல், “மகாராஷ்டிர சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைமைக் கொற டாவாக முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் நியமிக்கப்பட்டு உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ, அமலாக்கத்துறை மிரட்டலே கட்சித் தாவலுக்குக் காரணம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராகவும், தலைமைக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டு இருப்பவர் ஜிதேந்திர அவாத். இவர், “அஜித் பவார் உள்ளிட்டோர் பாஜகவோடு சென்றதற்கு, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை மிரட்டல்களைத் தவிர வேறு முக்கிய காரணம் இல்லை” என்று  தெரிவித்துள்ளார். “25 ஆண்டுகளாக தங்களை அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பு களில் வைத்துப் பார்த்த கட்சியை உதறித் தள்ளிவிட்டு சென்றதை அவர்கள் நினை வில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப் பிட்டுள்ளார்.

சரத் பவார் அணிக்கு மீண்டும் திரும்பிய எம்.பி.,
பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரி விக்க அஜித் பவாருடன் சென்ற தேசியவாத காங்கிரஸ் எம்.பி., அமோல் கோல்ஹே மீண்டும் சரத் பவாருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”மனதுக்கும், இத யத்திற்கும் இடையே போர் நடக்கும் போது,  உங்கள் இதயத்தைக் கேளுங்கள். ஒரு வேளை மனம் சில சமயங்களில் ஒழுக்கத்தை மறந்துவிடும். ஆனால் இதயம் ஒருபோதும் மறக்காது” என்று கோல்ஹே கூறியுள்ளார்.