மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோவிலுக்குள் பாலிவுட் தம்பதியான ரன்பீர் கபூர்-ஆலியா பட்டை நுழைய விடாமல் இந்துத்துவா அமைப்பினர் தடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் சமீபத்தில் ”பிரம்மாஸ்திரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டமபர் 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், கடந்த 2011-ஆம் ஆண்டில் ரன்பீர் கப்பூர் மாட்டிறைச்சி தனக்கு மிகவும் பிடிக்கும் என பேசிய வீடியோ ஒன்று வைரலான நிலையில், பிரம்மாஸ்திரா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottBrammastra என்ற ஹேஷ்டேக்கை இந்துத்துவா அமைப்பினர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோவிலுக்குள் ரன்பீர் கபூர்-ஆலியா பட்டை நுழைய விடாமல் இந்துத்துவா அமைப்பினர் தடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.