states

img

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை

பாஜகவின் வகுப்புவாத அரசிய லால் கடந்த 5 மாத காலமாக வன்முறை பூமியாக மணிப் பூர் மாநிலம் மாறியுள் ளது. இந்த  வன்முறை யால் 170க்கும் மேற்பட் டோர் உயிரி ழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்  கான மக்கள் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். பல ஆயிரம் குடும்பங்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மணிப் பூரை ஆட்சி செய்யும் பாஜக அரசு மாநி லத்தில் அமைதி நிலவுவதாக கூறி நிலை மையை திசை திருப்பி வருகிறது. வன்  முறை தொடங்கிய நாளான மே 3 அன்று  மணிப்பூரின் பெரும்பாலான பகுதியில் இணையசேவை துண்டிக்கப்பட்டது.அடுத்த 2 நாட்களில் மாநிலம் முழுவதும்  இணையசேவை துண்டிக்கப்பட்ட நிலையில், 5 மாதத்திற்கு பிறகு மீண்டும்  இணைய சேவை வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் செய்தி யாளர்களிடம் அறிவித்துள்ளார்.