states

img

மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான்!

நாக்பூர்: மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக ஒமிக்ரான் பரவக் கூடியதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

;