states

img

ஆளுநர்கள் அரசியல் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து


  மகாராஷ்ட்ராவில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்ற அம்மாநில ஆளுநரின் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சி சின்னம் யாருக்கு சொந்தம் ? என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கில் "பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் எவ்வாறு கூறலாம்? ஆளுநர்கள் அரசியல் அரங்கத்திற்குள் நுழையக் கூடாது" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்