மகாராஷ்டிராவில் காதல் திருமணம் செய்த பெண்ணின் தலையை வெட்டிய சகோதரன் தாயுடன் செல்பி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிரமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் 8 நாட்களுக்கு பின் ஜூன் 21ம் தேதி காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வைஜாப்பூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஞாயிறன்று அந்த பெண் சமையலறையில் இருந்த போது பெண்ணின் சகோதரர் அந்த பெண்ணின் தலையை வெட்டினார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சகோதரனும், தாயும் பெண்ணின் தலையுடன் செல்பி எடுத்துள்ளனர். தகவலறிந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் தலையை வெட்டி, அதனுடன் இருவரும் செல்ஃபி எடுத்தது போல் தெரிகிறது. செல்போனை கைப்பற்றி பார்த்தபோது அதில் செல்பி படம் இல்லை. தாய்-மகன் இருவரும் படத்தை நீக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். அந்த செல்பி புகைப்படம் ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அதை மீட்டெடுப்பதற்காக தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக வைஜாபூர் சப் டிவிஷன் போலீஸ் அதிகாரி கைலாஷ் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.