states

அக்.23 இல் இஸ்ரோவின் ‘எல்விஎம் 3’ ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது

பெங்களூரு, அக்.16 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய த்தின் (இஸ்ரோ) ‘எல்விஎம் 3’  என்ற மிகப்பெரிய ராக்கெட் 36 செயற்கைக் கோள்களுடன் அக்டோபர் 23 அன்று விண்ணில் பாய்கிறது.இதன்மூலம் முதன் முறையாக  வணிகச் சேவையில் ஈடுபடுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’ என்ற நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் அரசு, கல்வி, வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை  விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ நிறுவனத் திடம் வழங்கியுள்ளது. அக்டோபர் 23 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்  தவான் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது. ‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்று அழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற்போது ‘எல்விஎம் 3’ என்று அழைக்கப்படுகிறது. இது 43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு  செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக வணிகச் செயல் பாடுகளுக்காக பயன்படுத்தப்படஉள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனம் இடையே மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங் களின் அடிப்படையில் ஒன்வெப் நிறுவனத் தின் செயற்கைக்கோள் களை ‘எல்விஎம் 3’ விண்ணில் ஏவுகிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் வழியே ‘எல்விஎம் 3’ சர்வதேச வணிகச் சேவை சந்தையில் நுழைகிறது” என்று தெரிவித்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தில் ஏர்டெல் நிறுவனம் பெரும் முதலீடு செய்துள்ளது.