மத்திய அரசு வேறு அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் புதிய மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் இன்று 21 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் கூறியதாவது:-
வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.