தலைநகர் தில்லியில் இன்று 21 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் புதிய மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத்தொடர்ந்து விவசாயிகள் தொடர்ச்சியாக இன்று 21 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று (புதன்கிழமை) மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.