திங்கள், ஜனவரி 25, 2021

states

img

தில்லி: போராடும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு

தில்லியில் போராடும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 26ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் இடது சாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கனடா, லண்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
இந்நிலையில் தில்லியில் போராடும் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வில்லை என புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

;