states

img

மிரட்டும் வெப்ப அலை பீகாரில் மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள்

வடமாநிலங்களில் வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக தில்லி, பஞ்சாப்,  ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்  தான், பீகார், குஜராத் ஆகிய மாநி லங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக மோசமான அளவில் உள்ளது.  குறிப்பாக வெயிலின் தாக்கத்தால்  ராஜஸ்தான், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில்  இயல்பு நிலை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், வட இந்தியாவின் பெரும் பாலான மாநிலங்களுக்கு இந்திய  வானிலை ஆய்வு மையம் வெயி லுக்கான “ரெட் அலர்ட்” எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் ஷேக்பூராவில் வெப்ப அலையின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மாணவர்கள் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் தண்ணீர் கொடுத்தும், விசிறியை வைத்து  விசிறியும் முதலுதவி செய்து மாண வர்களை வெப்பத்திலிருந்து ஆசு வாசப்படுத்தி பெரியளவு பாதிப்பு ஏற்படாதபடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்ப வம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

47 டிகிரி வெப்பம் வெளிப்பட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்காதது ஏன்? 

பீகாரில் கடந்த சில நாட்களாக  43 டிகிரிக்கு மேல் வெப்பம் புரட்டி  எடுத்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக 47 டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. பக்சர், ஔரங்காபாத், கயா, கை மூர் மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டங்  களில் வெப்ப அலை வீசும் என்றும்,  சீதாமர்ஹி, மதுபானி, தர்பங்கா, பாபுவா, ரோஹ்தாஸ், அவுரங்கா பாத் மற்றும் நவாடா ஆகிய இடங்க ளில் வெப்ப அலைக்கான உயர் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ஆனால்  பீகார் மாநிலத்தை ஆளும் பாஜக  கூட்டணி வெப்ப தடுப்பு நட வடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மக்களுக்கு என்ன ஆனாலும் பர வாயில்லை, மக்களவை தேர்த லில் வெற்றி பெற்று அதிகாரத்தை  கைப்பற்றும் வேலையை மட்டுமே  பீகார் பாஜக கூட்டணி அரசு கவ னித்து வருகிறது என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

தில்லியிலும் 50 டிகிரி செல்ஸியஸ் வெப்பம்

52.3 டிகிரி செல்சியஸ்: புதிய வரலாறு படைத்த முங்கேஷ்பூர்

மிதவெப்ப மண்டலமான தில்லி யில் வெயிலின் தாக்கம் மிகக்  கடுமையாக இருக்காது. கோடைக் காலங்களில் 30 டிகிரிக்கு மேல்  வெயில் இருக்கும்.  ஆனால் பருவ நிலை மாற்றத்தால் தில்லியில்  கடுமையான அளவில் வெயில்  சுட்டெரித்து வருகிறது. பாலை வன பூமியை போன்று தில்லி மண்  வெயிலால் கொதித்து வரும்  நிலையில், இதுவரை இல்லாத  அளவில் தில்லியின் முங்கேஷ்பூ ரில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. வட மேற்கு தில்லியில் 49.9 டிகிரி  செல்சியஸ் அளவிலும் வெயில்  மிரட்டியுள்ளது. நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்து வருவதால்  தில்லி மக்கள் ஏசி வாங்க கடை களில் குவிந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 50 டிகிரி  செல்ஸியஸ் அளவிற்கு வெப்ப நிலை எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;